ஒரே வாரத்தில் 2.75 லட்சம் பேர் BSNL-க்கு படையெடுப்பு.! |
ஒரே வாரத்தில் 2.75 லட்சம் பேர் BSNL-க்கு படையெடுப்பு.!
ஒரே வாரத்தில் 2.75 லட்சம் பேர் BSNL-க்கு படையெடுப்பு.!: ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஜூலை 3ம் தேதி எதிர்பாராதவிதமாக கட்டணத்தை உயர்த்தியுள்ளன.குறிப்பாக, தற்போது ஒரு குடும்பத்தில் சராசரியாக 4 பேர் செல்போன் பயன்படுத்துவதால், இந்த புதிய கட்டண உயர்வு மாதச் செலவில் 2 ஆயிரம் ரூபாய் வரை சேர்க்கும் என கூறப்படுகிறது. .
இதை எப்படி சமாளிப்பது, எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் பலர் திணறி வரும் நிலையில், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் கட்டணத்தை உயர்த்தாதது அவர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
இதன் காரணமாக, கடந்த சில நாட்களாக, மொபைல் எண்களை மாற்றாமல், தொலைத்தொடர்பு நிறுவனங்களை மட்டுமே மாற்றும் எம்என்பி திட்டத்தில், தனியார் நிறுவன சேவையிலிருந்து, பிஎஸ்என்எல் சேவைக்கு பலர் மாறினர். இதனால் ஒரே நாளில் 2 லட்சத்து 93 ஆயிரத்து 630 பேர் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாறியுள்ளதாக பிஎஸ்என்எல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
BSNL Portal
இதுகுறித்து கும்பகோணம் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணியாற்றும் ஊழியர் விஜய் ஆரோக்கியராஜிடம் ஈடிவி பாரத் கேட்டபோது, “சாதாரண மக்களுக்கு மலிவு விலையில் பிஎஸ்என்எல் சேவை கிடைப்பதால், கும்பகோணம் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் பிஎஸ்என்எல் சேவைக்கு மாறி வருகின்றனர். கடந்த சில நாட்களாக (BSNL) நிறுவனம் 4G சேவையை வழங்கி வருவதாகவும், இதுவரை கும்பகோணத்தில் 5G சேவை தொடங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரே வாரத்தில் 2.75 லட்சம் பேர் BSNL-க்கு படையெடுப்பு.! |
எத்தனை லட்சம் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவைக்கு மாறினாலும், அதற்கேற்ப சர்வர்களின் தரமும் மேம்படும் என்றும், சேவை தவறாமல் சமாளிக்கும் திறன் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு உள்ளது என்றார்.
(கும்பகோணம் சேவை மையத்தில்) கடந்த 4-5 நாட்களாக எண்ணற்றோர் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாறி வருவதாகவும், இதுவரை ஒருவர் மட்டுமே செய்து வந்த சிம்கார்டு வழங்கும் பணியை தற்போது 3 பேர் செய்து வருவதாகவும் கூறினார். அதேபோல், இதுவரை கைமுறையாக வழங்கப்பட்டு வந்த இந்த சிம்கார்டு வழங்கும் பணி நேற்று முதல் கைரேகை பதிவு மூலம் தாமதமின்றி நடைபெற்று வருகிறது. மேலும், வாடிக்கையாளர்களின் வசதிக்காக தற்போது இரவு 8 மணி வரை சிம் கார்டு வழங்கும் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.